புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

விருதுநகர்


விருதுநகர்-சிவகாசி ரோட்டில் வெள்ளூர் விலக்கில் வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சூலக்கரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட 14 ஆயிரத்து 869 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. காருடன் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக சாத்தூரை சேர்ந்த சரவண மணிகண்டன் (வயது 38), துலுக்கப்பட்டியைச் சேர்ந்த கணேஷ்குமார்(36) மஞ்சுநாத்(38) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Related Tags :
Next Story