புகையிலை பொருட்கள் பறிமுதல்


புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலத்தில் உள்ள கடைகளில் ஆய்வு: புகையிலை பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகயைிலை பொருட்கள் விற்கப்படுகிறதா?, விற்பனை செய்யப்படும் உப்புகளில் அயோடின் கலந்து உள்ளதா? என குத்தாலம் வட்டார மருத்துவ அலுவலர் கோபி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் குத்தாலம் போலீசார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளை கண்டறிந்து அழித்ததோடு வருங்காலங்களில் அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஒருசில கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


1 More update

Next Story