ரூ.10¾ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
ரூ.10¾ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவை
குடோனில் பதுக்கி வைத்திருந்த மற்றும் கேரளாவில் இருந்து கடத்தி வந்த ரூ.10¾ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்யப்பட்டனர்.
போலீசார் அதிரடி
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் காபி கடை பஸ் நிறுத்தம் அருகே சோதனை செய்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓடி அத்திப் பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்குள் பதுங்கினார். அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார் அதிரடியாக குடோனுக் குள் புகுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்த 4 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். அதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
ரூ.7½ லட்சம்
பின்னர் குடோனில் சோதனை செய்தபோது ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 750 கிலோ 75 கிராம் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள், அங்கிருந்த சொகுசு கார் மற்றும் ரூ.39 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த ராம் (வயது24), கோபால்குமார் (24) என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியது ஜெகதீஷ் பட்டேல், பரத் பட்டேல் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடத்தல்
கோவையை அடுத்த மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம், சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ், போலீசார் நவீன், செந்தில் ஆகியோர் மதுக்கரை மார்க்கெட் அருகே ரோந்து சென்றனர். அவர்கள், அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதற்குள் பண்டல் பண்டலாக புகையிலை பொருட்கள் இருந்தன. உடனே அந்த மினிவேனை ஓட்டி வந்த மதுக்கரையை சேர்ந்த ஆனந்த் (23) என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.
புகையிலை பொருட்கள்
அதற்கு அவர், கேரளாவை சேர்ந்த அருண் என்பவரிடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி கோவைக்கு கடத்தி வந்து கடைக ளில் விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே போலீசார் ஆனந்தை கைது செய்தனர்.அந்த மினி வேனில் இருந்த ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 325 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆனந்துக்கு புகையிலை பொருட்களை கொடுத்த கேரளாவை சேர்ந்த அருண் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.