கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
வெள்ளியணை அருகே கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர்
கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் இளங்கோவன் நேற்று முன்தினம் இரவு வெள்ளியணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தேவகவுண்டனூர் பகுதியில் சென்ற டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். இதில் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி சுமார் 1 டன் அளவுள்ள கிராவல் மண்ணை ஏற்றி வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசாருக்கு இளங்கோவன் புகார் அளித்தார். இதையடுத்து, கிராவல் மண்ணை கடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா லந்தக்கோட்டை எல்.புதூரை சேர்ந்த மதிவாணன் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், டிராக்டரை டிப்பருடன் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story