3 லாரிகள், பொக்லைன் பறிமுதல்


3 லாரிகள், பொக்லைன் பறிமுதல்
x

மத்திகிரி அருகே ஏரியில் மண் அள்ளி கடத்த முயன்ற 3 லாரிகள், பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி

மத்திகிரி

மத்திகிரி போலீசார் கலுகொண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு திம்மசந்திரம் ஏரியில் இருந்து 3 டிப்பர் லாரிகளில் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக மண் அள்ளி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் 3 டிப்பர் லாரிகள், 3 பொக்லைன் எந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story