அனுமதியின்றி மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்


அனுமதியின்றி மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
x

அனுமதியின்றி மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி கண்மாயில் கிராவல் மண் அனுமதியின்றி அள்ளப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து வெம்பக்கோட்டை தாசில்தார் ரங்கநாதன், கிராம நிர்வாக அலுவலர் தங்க மாரியப்பன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊத்துப்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்த மகேந்திரன் (வயது 40), சேவைக்காரன்பட்டியை சேர்ந்த ராஜபாண்டியன் (28) ஆகியோர் அனுமதியின்றி கிராவல் மண்ணை டிராக்டரில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் டிராக்டரை பறிமுதல் செய்து ஏழாயிரம் பண்ணை போலீசில் வெப்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.



Next Story