முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல்
முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர்
அரியலூர் நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் தேவேந்திரன், சம்பத் ஆகியோர் எடை அளவை பயன்படுத்தும் உணவு நிறுவனங்கள், நகை கடை, அடகு கடைகள், மளிகை கடைகள் உள்பட பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 6 கடைகளில் எடை தராசுகள் முத்திரையிடப்படாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வர்த்தகர்கள், தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிட வேண்டும். மறு முத்திரை சான்றை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். எடையளவுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிடா விட்டாலோ அல்லது பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்காவிட்டாலோ சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story