தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படை தளபதிகள் ெபாறுப்பேற்பு


தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படை தளபதிகள் ெபாறுப்பேற்பு
x

தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படை தளபதிகள் ெபாறுப்பேற்பு

மயிலாடுதுறை

தமிழகத்தில் 38-வது புதிய மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில் மயிலாடுதுறை போலீஸ்துறைக்கு துணையாக ஊர்க்காவல் படையினர் 150 பேர் பணியாற்றி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஊர்க்காவல் படையினருக்கு தலைமை அதிகாரிகளான வட்டார தளபதி, துணை வட்டார தளபதிகள் புதிதாக தேர்வு செய்வதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டு நேர்காணல் நடந்தது. அதில் புதிய வட்டார தளபதியாக அலெக்சாண்டர் எப்லின் ஐசய்யா, துணை வட்டார தளபதியாக கோதம்சந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பதவியேற்பு விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படை தளபதிகளுக்கு பணிக்கான நியமன சான்று வழங்கினார். இதனையடுத்து 2 பேரும் பொறுப்பேற்று கொண்டனர். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜ்குமார், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story