பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான மாற்றுத்திறனாளி பயனாளிகள் தேர்வு முகாம்
பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான மாற்றுத்திறனாளி பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.
கரூர்
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக அவர்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில் 2 கால்களும் பாதிக்கப்பட்டு 2 கைகளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், இந்த பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டுமென மனு செய்த பயனாளிகளை மருத்துவர் உள்ளிட்ட குழுவினர் நேர்காணல் செய்து தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமிற்கு 2 கால்களும் பாதிக்கப்பட்டு 2 கைகளும் நல்ல நிலையில் உள்ள 113 மாற்றுத்திறனாளி பயனாளிகள் கலந்து கொண்டார்கள். முன்னதாக 40 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான திறன்பேசியினை கலெக்டர் வழங்கினார்.
Related Tags :
Next Story