சாப்ட் பால் போட்டிக்கு வீரர்கள் தேர்வு முகாம்


சாப்ட் பால் போட்டிக்கு வீரர்கள் தேர்வு முகாம்
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாப்ட் பால் போட்டிக்கு வீரர்கள் தேர்வு முகாம் விருத்தாசலத்தில் வருகிற 31-ந் தேதி நடக்கிறது

கடலூர்

விருத்தாசலம்

9-வது மாநில அளவிலான சாப்ட் பால் விளையாட்டு போட்டி அடுத்த மாதம்(ஆகஸ்டு) 5 மற்றும் 6-ந் தேதிகளில் வேப்பூர் தாலுகா ஐவதக்குடி ஸ்ரீ ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான கடலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் அணிக்கான வீரர்கள் தேர்வு விருத்தாசலம் ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 31-ந் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கலாம் என்று கடலூர் மாவட்ட சாப்ட்பால் விளையாட்டு சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் ராஜராஜ சோழன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story