தேனி மாவட்ட நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு


தேனி மாவட்ட நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
x
தினத்தந்தி 11 Feb 2023 8:30 PM GMT (Updated: 2023-02-12T02:00:13+05:30)

தேனி மாவட்ட நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

தேனி

தேனி மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டம், போடி நகர வர்த்தக சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முருகன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் மாதவன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், மாதம் ஒருமுறை சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சங்கமும் மாதாந்திர கூட்டத்தை நடத்தி அதன் விவரங்களை மாவட்ட சங்கத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாதாந்திர சந்தாக்களை அந்தந்த ஊரில் நடைபெறும் சங்க கூட்டத்தில் செலுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பிறகு சங்கத்தின் தேனி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, மாவட்ட தலைவராக மாதவன், மாவட்ட செயலாளராக சைய்யது அபுதாகீர், மாவட்ட பொருளாளராக கருப்பணன், துணைத்தலைவர்களாக மணி, குணசேகரன், துணை செயலாளர்களாக பிரின்ஸ், மேகவர்ணன், அப்துல் பாரி, தகவல் தொடர்பாளராக பட்டாபிராமன், அமைப்பு செயலாளராக இஸ்மாயில், துணை அமைப்பு செயலாளராக கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் இஸ்மாயில் நன்றி கூறினார்.


Next Story