வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு


வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கத்தின் 2023-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் போட்டியின்றி தலைவராக வக்கீல் துரை, துணை தலைவராக உதயகுமார், பொருளாளராக கண்ணபிரான், செயலாளராக கணேஷ், உதவி செயலாளராக இமயவர்மன் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக அருள்பிரகாஷ், சேவியர் ஆரோக்கியராஜ், செந்தில்குமார், வீரமணி, ஜாபர், பாலசுப்பிரமணியம், சுப்பிரமணிய பிரபாகர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story