மாநில கைப்பந்து போட்டிக்குசேலத்தில் வீரர், வீராங்கனைகள் தேர்வு
சேலம்
சேலம்
மாநில அளவிலான கைப்பந்து போட்டி சேலத்தில் வருகிற 12-ந் தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகள் தேர்வு நேற்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சிறை மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராஜாராம், அகிலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகள் தேர்வை தொடங்கி வைத்தார். இதில் 250 ஆண்கள் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஆண்கள் பிரிவில் 18 பேரும், பெண்கள் பிரிவில் 18 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story