கிரிக்கெட் போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு


கிரிக்கெட் போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு
x
தினத்தந்தி 18 May 2023 12:30 AM IST (Updated: 18 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் கிரிக்கெட் போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது.

தென்காசி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மைய (பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமி, கணக்கப்பிள்ளை வலசை) வளாகத்தில் நடக்கிறது.

இதில் பங்கு பெறுபவர்களுக்கு அனுமதி இலவசம். பங்கு பெறுபவர்கள் 13 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ள வீராங்கனைகள் ½ மணி நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும். தேர்வுக்கு வரும் வீராங்கனைகள் வெள்ளை நிற சீருடை மற்றும் ஷு கண்டிப்பாக அணிந்து வர வேண்டும். தேர்வில் தென்காசி மாவட்ட கிரிக்கெட் வீராங்கனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த தகவலை தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஸ்ரீநாத் ராமன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story