மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு- நாளை பதிவு செய்ய அழைப்பு


மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு- நாளை பதிவு செய்ய அழைப்பு
x

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு நாளை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி போட்டிக்கு அனைத்து வயதினருக்கான (ஒபன் டூ ஆல்) வீரர்கள் தேர்வு போட்டிகள் பெரம்பலூரில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. இந்த தேர்வு போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களது ஆதார்அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 தபால் தலையளவு புகைப்படம்-2, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றை எடுத்து வந்து நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்குள் தங்களது வருகையை பதிவு செய்திடவேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்தார்.

1 More update

Next Story