மண்டல அளவிலான ஆக்கி போட்டிக்கு வீரர்கள் தேர்வு


மண்டல அளவிலான ஆக்கி போட்டிக்கு வீரர்கள் தேர்வு
x

மண்டல ஆக்கிப்போட்டிக்கான வீரர்கள் தேர்வில் 66 பேர்= தேர்வு பெற்றனர்.

ராணிப்பேட்டை

மண்டல ஆக்கிப்போட்டிக்கான வீரர்கள் தேர்வில் 66 பேர்= தேர்வு பெற்றனர்.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே விளையாட்டு போட்டிகள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் வேலூர் மண்டலத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்கள் அடங்கி உள்ளன. இந்த நிலையில் வேலூர் மண்டல அளவிலான ஆக்கி விளையாட்டு போட்டிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதித்தேர்வு காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில்நடந்தது. இதனை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் சரஸ்வதி, குணசுந்தரி ஆகியோர் தொடங்கி வைத்து மேற்பார்வையிட்டனர்.

இதில் வேலூர் உள்பட 6 மாவட்டங்களை சேர்ந்த 225 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். 14,17,19 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகள் 3 பிரிகளில் தலா 11 பேர் என்று மொத்தம் 66 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஜான்சன், மகேஷ்குமார், மைக்கேல், வல்லரசு, வளர்மதி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு இவர்களை தேர்வு செய்தனர். மண்டல அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்படும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநில அளவிலான போட்டி அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story