திருச்சி மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு


திருச்சி மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு
x

திருச்சி மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருச்சி

தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவினருக்கான மாநில அளவிலான 48-வது ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட கபடி அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் முகாம், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் நீலகண்டன் தலைமையில் தேர்வு கமிட்டி உறுப்பினர்களான இந்திய புரோ கபடி அணி வீரர் திவாகர், பாரதிதாசன் பல்கலைக்கழக வீரர் கணேசன், தீயணைப்பு துறை வீரர் சூர்யமூர்த்தி மற்றும் நடுவர்கள் பலர் கலந்து கொண்டு வீரர்களுக்கு போட்டி வைத்து தேர்வு செய்தனர். இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட அணிக்கு இந்திய புரோ கபடி அணி வீரர் திவாகர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story