கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு
தூத்துக்குடியில் கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது.
தூத்துக்குடி
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு, தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு சின்னகண்ணுபுரத்தில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் நடக்கிறது. இந்த முகாமில் 13 முதல் 24 வயது வரை உள்ள வீராங்கனைகள் நேரடியாக பங்கேற்கலாம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு சங்கத்தின் இணைச்செயலாளர் கிரிஸ்பினை 8015621154 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவக்குமரன், இணை செயலாளர் கிரிஸ்பின் ஆகியோர் தெரிவித்து உள்ளனா்.
Related Tags :
Next Story