ஒரேநாளில் 2,500 நெல் மூட்டைகள் விற்பனை


ஒரேநாளில் 2,500 நெல் மூட்டைகள் விற்பனை
x
தினத்தந்தி 19 July 2023 5:02 PM IST (Updated: 19 July 2023 5:05 PM IST)
t-max-icont-min-icon

கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரேநாளில் 2,500 நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. கலவை பகுதியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்த நெல்லை அறுவடை செய்து கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஒரே நாளில் 2,500 மூட்டைகள் விற்பனையானது. இதில் கோ-51 ரக நெல் 75 கிலோ மூட்டை ரூ.1,275 முதல் ரூ.1,379 வரை விற்பனையானது. ஏ.டி.டி. 37 ரகம் (குண்டு) ரூ.1,469 முதல் ரூ.1,553 வரை விற்பனையானது. மகேந்திரா ரக நெல் ரூ.1,409 முதல் ரூ.1,646 வரை விற்பனை ஆனது.


Next Story