கள்ளக்குறிச்சிவாரச்சந்தையில் ரூ.55 லட்சத்துக்கு பருத்தி விற்பனை


கள்ளக்குறிச்சிவாரச்சந்தையில் ரூ.55 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.55 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சியில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி சந்தை நடைபெறும். அதன்படி நேற்று நடந்த பருத்தி சந்தையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 480 விவசாயிகள் 2,295 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் எல்.ஆர்.ஏ. ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்ச விலை ரூ.8,019-க்கும், குறைந்த பட்சவிலையாக ரூ. 6,289-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்ச விலை ரூ.5,899-க்கும், குறைந்தபட்ச விலை ரூ.4,210-க்கு ஏலம் போனது. மொத்தம் ரூபாய் 55 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனையானது.

வருகிற 22-ந்தேதி புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு அன்று வழக்கம் போல் பருத்தி சந்தைநடைபெறும். எனவே விவசாயிகள் பருத்தி மூட்டைகளை சந்தைக்கு கொண்டு வரலாம் என்று கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் கூறியுள்ளார்.

1 More update

Next Story