அரியலூரில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை-விவசாயிகள் குற்றச்சாட்டு


அரியலூரில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை-விவசாயிகள் குற்றச்சாட்டு
x

அரியலூரில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் மக்காசோளத்திற்கு யூரியா தேவை அதிகரித்துள்ளது. இதனால் உரங்களை வாங்க விவசாயிகள் கடைக்கு சென்று வருகின்றனர். ஆனால் போதுமான உரங்கள் கிடைப்பதில்லை. இதனால் விடியற்காலையில் இருந்து பூட்டியிருக்கும் கடைக்கு முன்பு காத்திருந்து ரூ.400-க்கு யூரியா உரங்களை வாங்கி செல்கின்றனர். கூடுதல் விலை என்றாலும் யூரியா கிடைக்கிறதே என்று விவசாயிகள் பல மணி நேரம் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். அதுவும் உரிய ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது. ஒரு துண்டு சீட்டில் விவசாயியின் பெயரை எழுதி 2 என்று எழுதி கொடுத்து அதன் பிறகு யூரியாவை விற்பனை செய்கின்றனர். இது குறித்து வேளாண்மைதுறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு என செய்தி வெளியிட்டும் வேளாண்மை துறை அதிகாரிகளின் போதிய அக்கறை இன்மையாலும் முறையாக திட்டமிடல் இல்லாததாலும் இதுபோன்று நடப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். எனவே கூடுதல் விலைக்கு உரங்களை விற்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story