சேலத்தில்தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனைவரத்து தொடங்கியதால் விலை குறைந்தது


சேலத்தில்தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனைவரத்து தொடங்கியதால் விலை குறைந்தது
x
சேலம்

சேலம்

சேலத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து தொடங்கியதால் விலை குறைய தொடங்கியது.

வரத்து அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தம்மம்பட்டி, வாழப்பாடி, மேட்டூர், மேச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது.

இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள், வெளி மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தக்காளி விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

மேலும் குறைய வாய்ப்பு

இதனிடையே உழவர் சந்தைகளில் நேற்று தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.95 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறும் போது, பருவநிலை மாற்றம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் உழவர் சந்தைகளுக்கு தக்காளி, அவரை, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி வரத்து குறைந்தது. இதன் காரணமாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் விலை குறைய தொடங்கி உள்ளது. தக்காளி உள்ளிட்ட காய்கறி வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கி விட்டால் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.


Next Story