புரட்டாசி சனிக்கிழமையையொட்டிஉழவர்சந்தைகளில் ரூ.83 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி உழவர்சந்தைகளில் ரூ.83 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
சேலம்
சேலம்
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பொதுமக்கள் அசைவ உணவு தவிர்த்து, சைவ உணவுகளை சமைப்பார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் உழவர் சந்தைகளில் காய்கறி, பழங்கள் அதிகளவில் விற்பனை ஆகும். அதன்படி புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையான நேற்று எடப்பாடி உழவர் சந்தையில் 12 ஆயிரத்து 680 கிலோ காய்கறிகள், 2 ஆயிரத்து 760 கிலோ பழங்கள் என மொத்தம் ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 840-க்கு விற்பனை ஆகின.
அதே போன்று மேட்டூர், இளம்பிள்ளை, அஸ்தம்பட்டி, ஜலகண்டாபுரம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, ஆட்டையாம்பட்டி, சூரமங்கலம், தம்மம்பட்டி, ஆத்தூர் என மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் 217¾ டன் காய்கறிகள், 4 டன் பழங்கள் மற்றும் பூக்கள் என மொத்தம் ரூ.83 லட்சத்து 92 ஆயிரத்து 88-க்கு விற்பனை ஆகின.
Related Tags :
Next Story