ரூ.8¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை


ரூ.8¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
x

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 24 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்துக்கு விற்பனையானது.

நாமக்கல்

உழவர்சந்தை

நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று 20¼ டன் காய்கறிகள் மற்றும் 3¾ டன் பழங்கள் என மொத்தம் 24 டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்து 955 -க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 4,880 பேர் வாங்கி சென்றனர்.

விலை விவரம்

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.65-க் கும், கத்தரி கிலோ ரூ.50-க் கும், வெண்டைக்காய் கிலோ ரூ.28-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.45-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.50-க்கும், கேரட் கிலோ ரூ.68-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.22-க்கும், இஞ்சி கிலோ ரூ.280-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்னவெங்காயம் கிலோ ரூ.60 -க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த வாரத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் வரத்து அதிகரித்தும், அவற்றின் விலை சற்றே குறைந்தும் காணப்பட்டது. குறிப்பாக கடந்த வாரம் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோவுக்கு ரூ.35 குறைந்து கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story