செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருச்சி
பொன்மலைப்பட்டி:
திருச்சி பொன்மலை ரெயில்வே குடியிருப்பு பகுதியில் உள்ள செல்வமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 22-ந் தேதி கணபதி ஹோமமும், மறுநாள் விக்னேஸ்வர பூஜையும், 24-ந் தேதி மூன்றாம், நான்காம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. நேற்று வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் உச்சரிக்க கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தமானது கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு செல்வ முத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story