செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி. காலனி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
பேட்டை:
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி. காலனியில் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. மறுநாள் காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை, மருந்து சாத்துதல், பரிவார மூர்த்திகள், எந்திர ஸ்தாபனம், விசேஷ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூன்றாம் கால பூஜையில் விசேஷ சந்தி, திரவிய ஹோமம், யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜையில் இருந்து புனித கலசங்களில் தீர்த்தங்கள் எடுத்துச் செல்லப்பட்டு 11 மணி அளவில் கோவில் விமானங்கள், விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக கமிட்டி தலைவர் ஜெயபாலன், உப தலைவர் திருமலையப்பன், செயலாளர் ஆறுமுகம் உட்பட கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.