செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா


செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:45 PM GMT)

புதுப்பேட்டை செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு அருகே புதுப்பேட்டையில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கணபதி ஹோமம், முதல் கால பூஜை, அங்குரார்பனம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு மங்கல இசையுடன் 2-ம் கால பூஜை, கோபூஜை, நாடி சந்தானம் நடந்தது. பின்னர் 9 மணிக்கு கடம் புறப்பட்டு, 9.30 மணிக்கு கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story