செல்வகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


செல்வகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

செல்வகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருச்சி

திருச்சி எடமலைப்பட்டியில் உள்ள செல்வ விநாயகர், சப்பாணி கருப்பு, ஒண்டி கருப்பு, செல்வ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி கடந்த 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. 6-ந் தேதி அய்யாளம்மன் படித்துறை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், யாக பூஜைகளும் நடந்தன. இதைத்தொடர்ந்து நேற்று காலை செல்வகாளியம்மன் கோவில் ராஜகோபுரம், மூலஸ்தான விமானம், செல்வ விநாயகர், செல்வகாளியம்மன், சப்பாணி கருப்பு, ஒண்டி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story