செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கவுண்டம்பாளையத்தில் உள்ள மாரியம்மன், செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கவுண்டம்பாளையம்
கவுண்டம்பாளையத்தில் உள்ள மாரியம்மன், செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன், செல்வவிநாயகர் கோவில்
கோவை கவுண்டம்பாளையத்தில் மாரியம்மன், செல்வவிநாயகர் கோவில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு முழு வீச்சில் நடந்து வந்தன. அந்த பணிகள் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 6-ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், அபி ஷேகம், ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. அதுபோன்று முதற்காலயாக பூஜை, 2-ம் கால பூஜை, 3-ம் காலயாக பூஜைகள் நடந்தன.
கும்பாபிஷேகம்
சிறப்பு நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், 4-ம் காலயாக பூஜை, நாடி சந்தானம், திரவ்யாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத்தொடர்ந்து மகாபூர்ணாகுதி, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு நடந்தது.
இதையடுத்து காலை 10.10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் எஸ்.கே.ராஜாபட்டர் தலைமையில் பட்டாச்சாரியர்கள் கலந்து கொண்டு கோவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.
அதைதொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப் பட்டது. பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள்
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, முன்னாள் எம்.பி. நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, கோவில் ஒருங்கிணைப்பாளர்கள் ஆடிட்டர் எம்.தேவராஜ், வக்கீல் எம்.ராஜேந்திரன், கே.என்.ஜவகர், கே.எஸ்.சரவணகுமார், கோவில் மிராசுதாரர்கள் கே.சண்முகசுந்தரம், கே.சி.ஜெகநாதன், கே.என்.ரவீந்திரன், ஆர்.சாமிநாதன், என்.மோனிஷ் நாகராஜ், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.மகேஷ்குமார், தி.மு.க. கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் ஜெ.எஸ்.சரத், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் பி.ராஜகோபால், குருசாமி கே.கே.ரத்தினசாமி, ஜி.மகேஷ்குமார், காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் கே.மகேந்திரன், அபிராமி புரமோட்டர்ஸ் பி.கோவிந்தராஜ், கே.ஆர்.குணசேகரன் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த அசோக் ஆறுக்குட்டி, கோவில் அர்ச்சகர் எஸ்.சிவக்குமார், சாமி உள்பட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், கே.ஆர்.ஜெயராம், அமுல்கந்தசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், கோவை புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர் மற்றும் வெண்தாமரை பாலு உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.