பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில்மகளிர் நல விழிப்புணர்வு கருத்தரங்கம்
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் நல விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் சித்திரைசெல்வி, தலைமை தாங்கினார். இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் சுஜிதா, வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பொது மருத்துவர், சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் அபிராமி, மகப்பேறு மருத்துவர், மகளிர் பிரிவு சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு ஏற்படும் மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய், நோய் தொற்று, அதிக எடை, இரும்பு சத்து பற்றாக்குறையினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் அவற்றிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் விளக்கி பேசினர். தொடர்ந்து இன்றைய காலத்தில் அதிகமாக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும், அதனை தடுப்பதற்குரிய உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து விளக்கி கூறினர். இதில் பேராசிரியைகள் கல்யாணி, அருண்நேரு, சுஜிதா ஆகியோர் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிறப்பு விருந்தினர்களை உதவி பேராசிரியர்கள் சித்ராதேவி, சுபா அறிமுகம் செய்தனர்.