தமிழ் கவிதை மரபுகள் குறித்த கருத்தரங்கு

தமிழ் கவிதை மரபுகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இளையான்குடி
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் முதுகலை தமிழ் துறை சார்பில் 20-ம் நூற்றாண்டு தமிழ் கவிதை மரபுகள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. துறை தலைவர் இப்ராஹிம் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை உரை ஆற்றினார்.
முதல் அமர்வில் உதவி பேராசிரியர் அப்துல் ரஹீம் தமிழ் கவிதை மரபுகள் பற்றி பேசினார். உதவி பேராசிரியர் கனகராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை தலைவர் முருகேசன் சிறப்பு உரையாற்றினார். இரண்டாம் அமர்வில் உதவி பேராசிரியர் சேக் அப்துல்லா வரவேற்றார். உதவி பேராசிரியை ஷிபா பேசினார். உதவி பேராசிரியர் தினேஷ் கோல்டு கேப்ரியல் சிறப்பு விருந்தினரான திருவாடானை அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை தலைவர் பழனியப்பன் அறிமுகம் செய்தார். நிகழ்வினை உதவி பேராசிரியை கார்த்திகா ஒருங்கிணைத்தார். இறுதியாக உதவி பேராசிரியை கதிஜா பீவி நன்றி கூறினார்.
நிகழ்வில் ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அகமது, ஆட்சி குழு உறுப்பினர்கள் அபூபக்கர் சித்திக், ஹமீத் தாவூத், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ்கான், கல்வியியல் கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.






