கருத்தரங்கம்
நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வனவிலங்கு சங்கம் சார்பில் யானைகளின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். செயலர் மற்றும் வனவிலங்கு சங்க தலைவர் பேராசிரியர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த விலங்குகள் நலன் பாதுகாப்பு நிபுணர் எரின் ஐவரி கலந்து கொண்டு யானைகளின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசினார். இந்த கருத்தரங்கில் பேராசிரியர் எட்வின், மதுரை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி மருத்துவர் கலைவாணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் ராஜாத்தி நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story