அறிவுசார் சொத்துரிமை கருத்தரங்கம்


அறிவுசார் சொத்துரிமை கருத்தரங்கம்
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அறிவுசார் சொத்துரிமை கருத்தரங்கம் நடைபெற்றது

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்து உரிமைகள் குறித்த கருத்தரங்கம் பல்கலைக்கழக அறிவியல் வளாக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அழகப்பா பல்கலைக்கழக வர்த்தக இணைவு மையம் ஆகியவை இணைந்து இக்கருத்தரங்கினை நடத்தின. கருத்தரங்கினை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தொடங்கி வைத்து பேசியதாவது, அழகப்பா பல்கலைக்கழகம் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவ தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புக்களை சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் உருவாக்க வேண்டும் அதோடு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையும் பெற்று கண்டுபிடிப்புக்களை சந்தைப்படுத்தவேண்டும் என்றார். சென்னை மத்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் முகேஷ்டூப்ளே தனது உரையில், தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதை விட சுயமாக தொழில் தொடங்க மாணவர்கள் முன்வர வேண்டும். மாணவர்கள் தொழில் முனைவோராக வருவதற்கு மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் பல்வேறு பயிற்சி வகுப்புகளில் அவசியம் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று கூறினார். அழகப்பா பல்கலைக்கழக வணிக இணைவு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருண் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் யுவக்குமார் நன்றி கூறினார்.


Next Story