பங்காரம் ஸ்ரீலட்சுமி கலைக்கல்லூரியில் கருத்தரங்கம்


பங்காரம் ஸ்ரீலட்சுமி கலைக்கல்லூரியில் கருத்தரங்கம்
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பங்காரம் ஸ்ரீலட்சுமி கலைக்கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் ஸ்ரீலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மற்றும் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீலட்சுமி ஹைகிரிவாஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிக நிர்வாகவியல் துறை 2-ம் ஆண்டு மாணவி ஆதிலட்சுமி வரவேற்றார். கலைக்கல்லூரி முதல்வர் சிராஜ்தீன், கல்வியியல் கல்லூரி முதல்வர் பாஸ்கரன், முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு சுய திறன் மேம்பாடு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். மேலும் இந்நிறுவனம் நடத்திய வேலைவாய்ப்பு நேர்காணலில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் கல்லூரி துணை முதல்வர்கள் சக்திவேல், சசிகலா, வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியை பிரியா, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை வணிகவியல் மூன்றாமாண்டு மாணவன் குணசீலன், முதலாமாண்டு மாணவி திவ்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் வணிகவியல்துறை மூன்றாமாண்டு மாணவி அபி நன்றி கூறினார்.

1 More update

Next Story