சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்


சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்
x

கள்ளக்குறிச்சியில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, சாலை பாதுகாப்பு குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது:- அம்மையகரம், சின்னசேலம் ஆவின்பாலகம், பங்காரம், இந்திலி, உலகங்காத்தான், வீரசோழபுரம், பிரிதிவிமங்கலம் ஆகிய பிரிவு சாலைகளில் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுகிறது. இந்த விபத்துகளை தவிர்க்க சாலைகளில் தடுப்புகள், ஒளிரும் மின்விளக்குகள் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும்.

இதைபோல் கள்ளக்குறிச்சி-ஏமப்பேர் வழியே சேலம் செல்லும் புறவழிச்சாலையை அகலப்படுத்துவதோடு, ஏ.கே.டி.பள்ளியில் இருந்து கள்ளக்குறிச்சி நகரபகுதிக்கு வரும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவுப்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கோபுரம் முன்பு அமைக்கப்படும் கழிப்பறையை வேறுஇடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, கூடுதல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, கள்ளக்குறிச்சி மண்டல போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், உளுந்தூர்பேட்டை மண்டல மேலாளர் செந்தூர்வேல், அலுவலக மேலாளர் சிவசங்கரன், துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேசன் மற்றும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story