கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில்ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த கருத்தரங்கு


கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில்ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த கருத்தரங்கு
x

கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில்ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த கருத்தரங்கு நடந்தது.

ராணிப்பேட்டை

கலவை

கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில்ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த கருத்தரங்கு நடந்தது.

கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி விளைவு அடிப்படையிலான கற்றல் மற்றும் பாடத்திட்ட கட்டமைப்பு மூலம் உயர்கல்வி நிறுவனத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முகமது சாதிக் தலைமை தாங்கினார். ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) விஜயராகவன் கலந்து கொண்டு பேசினார்.

கருத்தரங்கில் ஆக்சீலியம் கல்லூரியின் வேதியியல் துறை பேராசிரியை ரோஸ்லின் எழிலரசி, டி.கே.எம். பெண்கள் கல்லூரியின் இயற்பியல் துறைத்தலைவர் வினோதினி, பெங்களூரு கோபாலன் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் எந்திர பொறியியல் துறைத்தலைவர் நடராஜன், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை தலைவர் சுரேஷ், தூயநெஞ்ச கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவர் ரவி, திருவள்ளூவர் பல்கலைக்கழக வேதியியல் துறை தலைவர் மாதவன் உள்பட பலர் பேசினர். இதில் மாணவ-மாணவிக்ள கலந்து கொண்டனர். முடிவில் உயிரி வேதியியல் துறைத்தலைவர் ஜெயந்தி நன்றி கூறினார்.


Next Story