பெண்கள் மேம்பாடு குறித்த கருத்தரங்கு


பெண்கள் மேம்பாடு குறித்த கருத்தரங்கு
x

பெண்கள் மேம்பாடு குறித்த கருத்தரங்கு நடந்தது.

திருச்சி

தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு செல் தொடக்க விழா மற்றும் பெண்கள் "சவால்களை துணிச்சலுடன் சமாளித்தல்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கொங்குநாடு கல்வி நிறுவன தலைவர் பி.எஸ்.கே. பெரியசாமி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அசோகன் முன்னிலை வகித்தார். முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, பெண்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை மிகவும் துணிச்சலுடன் கையாண்டு வெற்றிபெற வேண்டும் என்றார். கல்லூரியின் டீன் யோகப்பிரியா, கல்லூரி பெண்கள் மேம்பாட்டுத் துறை தலைவர் முனைவர் நித்யா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். முன்னதாக மாணவி ஷாலினி வரவேற்றார். இதில் கல்லூரி அனைத்து துறை மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி சுகிதா நன்றி கூறினார்.


Next Story