செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 75 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.நேற்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி வளாகத்தில்நடந்தது. இதற்கு, மேலாண்மை குழு தலைவர் தங்கமணி தலைமைதாங்கினார். தலைமையாசிரியர் மகரஜோதிகணேசன் வரவேற்றார். துணைத்தலைவர் தமிழரசி முன்னிலை வகித்தார். மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் பிப்ரவரி மாதம் பள்ளி நூற்றாண்டுவிழாவை 6 நாட்கள் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் பிரதமர், தமிழக முதல்-அமைச்சர் ஆகியோருக்கு அழைப்பு கடிதங்கள் எழுதுவது என தீர்மானிக்கப்பட்டது. தீர்மானங்களை ஆசிரியை மகேஸ்வரி படித்தார். முடிவில் ஆசிரியை வெண்ணிலா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story