ஆட்களை அனுப்பி ரியல் எஸ்டேட் அதிபரைதாக்கியவர் நண்பருடன் கைது


ஆட்களை அனுப்பி ரியல் எஸ்டேட் அதிபரைதாக்கியவர் நண்பருடன் கைது
x

கடன் தகராறில் ஆட்களை அனுப்பி ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கியவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

செய்யாறு

கடன் தகராறில் ஆட்களை அனுப்பி ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கியவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

ரியல் எஸ்டேட் அதிபர்

செய்யாறு டவுன் கிடங்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 67), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயக்குமாரி. நேற்று முன்தினம் ஜெயகுமாரியின் நடராஜன், மனைவி ஜெயக்குமாரியின் தங்கை காஞ்சனா வீட்டிற்கு வந்திருந்தார்.

மதியம் வீட்டுக்குள் வந்த 3 நபர்கள் கட்டிலில் பத்திருந்த நடராஜனை கீழே தள்ளி கத்தியை காட்டி பணம், நகையை தரும்படி மிரட்டியுள்ளனர். இதனை பார்த்த மனைவி ஜெயகுமாரி, காஞ்சனா ஆகியோர் அவர்களை தடுக்க முயன்றனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரையும் கீழே தள்ளினர். மேலும் நடராஜனை கத்தியால் கன்னத்தில் கீழித்துள்ளனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நடராஜன் செய்யாறு போலீஸ் தகவல் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மர்ம நபர்கள் ஓட்டி வந்த பைக் வீட்டில் அருகே இருந்ததை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பரபரப்பான தகவல் கிடைத்தது. நடராஜன் செய்யாறு தாலுகா கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் (38) என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். கடன் தொகையை நடராஜன் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

மோட்டார்சைக்கிளில் அனுப்பினர்

ஆத்திரமடைந்த சுந்தர், நண்பரான செய்யாறு கொடநகர் பகுதியைச் சேர்ந்த விக்னேசுடன் (32) பேசி நடராஜனை தீர்த்தக்கட்ட முடிவு செய்து சென்னையிலிருந்து 3 பேரை வரவழைத்துள்ளனர். அவர்களை நடராஜன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் அனுப்பி நடராஜனை தாக்கியுள்ளனர். மேற்கண்ட தகவல் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சுந்தர் மற்றும் விக்னேஷை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள், காரை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சென்னை பகுதியை சேர்ந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story