'எங்களை வேறு மாநிலத்துக்கு அகதிகளாக அனுப்பி விடுங்கள்'


எங்களை வேறு மாநிலத்துக்கு அகதிகளாக அனுப்பி விடுங்கள்
x

பட்டா கேட்டு பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எங்களை வேறு மாநிலத்துக்கு அகதிகளாக அனுப்பி விடுங்கள் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சேலம்

பட்டா கேட்டு பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எங்களை வேறு மாநிலத்துக்கு அகதிகளாக அனுப்பி விடுங்கள் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சூரியூர் கிராம மக்கள்

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள சூரியூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சூரியூரில் 90 குடும்பத்தினர் வசித்து வந்தோம். நாங்கள் வசித்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறி சில மாதங்களுக்கு முன்பு எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் நாங்கள் உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்து வசித்து வருகிறோம்.

அகதிகளாக...

தற்போது உறவினர்களும் எங்களை வீட்டை விட்டு செல்லும் படி கூறி வருகின்றனர். இதனால் குடியிருக்க வீடு இல்லாமல் குழந்தைகள், ஆடு, மாடுகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு இலவச பட்டா கேட்டு அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளோம். கோரிக்கை குறித்து பலமுறை முறையிட்டும் எந்தவொரு பயனும் இல்லை.

எனவே நாங்கள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அகதிகளாக வருகிறோம். எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், ஆடு, மாடுகளையும் காப்பாற்ற ஆதரவு தாருங்கள் என்று கேட்டு கடிதம் எழுதி உள்ளோம். எனவே எங்களை அந்த மாநிலங்களுக்கு அகதிகளாக அனுப்பி வையுங்கள்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story