சிறுமிக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இன்ஸ்டாகிராமில் வேறு ஒருவர் படத்தை வைத்து பழகியதுடன் சிறுமிக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்த சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,
இன்ஸ்டாகிராமில் வேறு ஒருவர் படத்தை வைத்து பழகியதுடன் சிறுமிக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்த சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கும், 19 வயது வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்த வாலிபர் செல்போனில் வீடியோ கால் மூலம் சிறுமியிடம் பேசியுள்ளார். அப்போது அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்தார்.
அந்த வாலிபர் இன்ஸ்டாகிராமில் தனது படத்துக்கு பதிலாக மற்ெறாருவரின் படத்ைத வைத்திருந்ததும், அந்த படத்தில் இருக்கும் வாலிபர்தான் தன்னிடம் பேசுகிறார் என அந்த சிறுமி நம்பி பழகியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமி அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்தி உள்ளார். ஆனால், அந்த வாலிபர், அந்த சிறுமிக்கு தனது ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
போக்சோவில் கைது
இதுகுறித்து அந்த சிறுமி, தனது தந்தையிடம் கூறினார். பின்னர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர், சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த சிவா (வயது 19) என்பதும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறு ஒருவரின் படத்தை பயன்படுத்தியதும், சிறுமிக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், சென்னை வேளச்சேரி பகுதியில் இருந்த சிவாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார்.