செங்கோட்டை - தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்


செங்கோட்டை - தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை - தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை முதல் சென்னை தாம்பரம் வரை செல்லும் வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20684) நேற்று முதல் ஓட தொடங்கியது. தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் தனுஷ் எம்.குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக ரெயில் டிரைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். பின்னா் ரெயில் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான எஸ்எம்.ரஹீம், செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்கதலைவா் எல்.எம்.முரளி, செயலாளர் கிருஷ்ணன், துணைத்தலைவா் ராஜேந்திரராவ், துணைச்செயலாளா் செந்தில் ஆறுமுகம், பொருளாளா் கே.கே.சுந்தரம், மக்கள் தொடர்பு அலுவலா் ராமன், நகர்மன்ற உறுப்பினா்கள் இசக்கிதுரை பாண்டியன், மேரி.பொன்னுலிங்கம், வேம்புராஜ், செண்பகராஜன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்த ரெயில் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளது. நேற்று மாலை செங்கோட்டையில் இருந்து 4.15 மணிக்கு புறப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.


Next Story