செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலில்பெண் பயணி தவறவிட்ட 26½ பவுன் நகையை மீட்ட போலீசார்


செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலில்பெண் பயணி தவறவிட்ட  26½ பவுன் நகையை மீட்ட போலீசார்
x

செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலில் பெண் பயணி தவறவிட்ட 26½ பவுன் நகையை போலீசார் மீட்டனர்

மதுரை


செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரெயில் நேற்று வந்து கொண்டிருந்தது. அதில், மதுரை கோ.புதூர் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மனைவி மாரியம்மாள் (வயது 40) என்பவர் பயணம் செய்துள்ளார். அவர், சங்கரன்கோவிலில் இருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். மதுரை ரெயில்நிலையம் வந்தபோது அவர் கொண்டு வந்த பையை ரெயிலின் இருக்கைக்கு கீழ் பகுதியில் மறந்து வைத்து விட்டு இறங்கி விட்டார். அந்த பையில் 26½ பவுன் நகைகள் இருந்துள்ளது. ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த மாரியம்மாளுக்கு, தான் கொண்டு வந்த பை குறித்து ஞாபகம் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் மதுரை இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன், தலைமை காவலர் பொன் சவுந்திரபாண்டியன் ஆகியோர் ரெயிலில் சென்று சோதனை செய்து அந்த நகைப்பையை மீட்டனர். பின்னர், மாரியம்மாள், சண்முக வேல் ஆகியோரை நேரில் அழைத்து நகையை அவர்களிடம் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story