கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டாக செங்கோட்டு வேலவன் பொறுப்பேற்பு
கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டாக செங்கோட்டு வேலவன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதுக்கோட்டை
கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டாக இருந்த சிவசுப்பிரமணியம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்தநிலையில், கன்னியாகுமரியில் பயிற்சி பெற்று வந்த செங்கோட்டு வேலவன் நேரடியாக போலீஸ் துணை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பொறுப்பு ஏற்றுக்கொண்ட செங்கோட்டு வேலவனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த கீரனூர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நகர் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளையும், போக்குவரத்து நெரிசலையும் சரி செய்ய வேண்டும். செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும். மாலை நேரங்களில் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்வதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story