மதுபோதையில் மயங்கி கிடந்த பெண்ணால் பரபரப்பு
செங்கோட்டையில் மதுபோதையில் மயங்கி கிடந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் வேலை செய்து வருகிறார். அதே கடையில் தென்காசியைச் சேர்ந்த ஒரு வாலிபரும் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வேலைக்கு சென்ற இளம்பெண் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அவரது கணவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஏதோ உளறியதாக தெரிகிறது. இதையடுத்து விற்பனை நிலையத்திற்கு அந்த பெண்ணின் கணவர் சென்றார். அங்கு அவரது மனைவி மதுபோதையில் மயக்க நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுதொடர்பாக அந்த பெண்ணுடன் வேலை பார்த்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் செங்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.