தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு


தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 May 2023 1:30 AM IST (Updated: 8 May 2023 8:40 PM IST)
t-max-icont-min-icon

தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு

கோயம்புத்தூர்

கோவை

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு பெண் வந்தார். பின்னர் அவர் திடீரென்று அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த தனலட்சுமி என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள குட்டை நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அத்துடன் அந்த பகுதிக்கு செல்லும் வழியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் சிரமம் அடைந்து வருவதும், அதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தனலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர் போராட்டத்தை கைவிட்டதுடன், மாவட்ட வருவாய் அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துவிட்டு சென்றார்.


Next Story