தங்ககட்டி ேமாசடியில் சிக்கிய மேற்பார்வையாளர் பற்றி பரபரப்பு தகவல்

நகை தயாரிப்பு நிறுவனத்தில் தங்க கட்டி மோசடி யில் சிக்கிய மேற்பார்வையாளர், ஆன்லைன் சூதாட்டத்தில் தினசரி ரூ.4 லட்சம் இழந்த பர பரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
நகை தயாரிப்பு நிறுவனத்தில் தங்க கட்டி மோசடி யில் சிக்கிய மேற்பார்வையாளர், ஆன்லைன் சூதாட்டத்தில் தினசரி ரூ.4 லட்சம் இழந்த பர பரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தங்கக்கட்டி மோசடி
கோவை சலீவன் வீதியில் தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவ னத்தில் வீரகேரளத்தை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 34) மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர், நிறுவனம் சார்பில் நகை பட்டறைகளுக்கு கொடுத்த தங்க கட்டிகளை மோசடி செய்தார்.
இது குறித்து அந்த நிறுவன மேலாளர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் ஜெகதீசனை பிடித்து விசாரித்தனர். இதில் ஜெகதீஷ் கடந்த 6 மாதங்களில் ரூ.55 லட்சம் மதிப்பிலான 1,467 கிராம் தங்க கட்டிகளை மோசடி செய்ததும், அந்த பணத்தை ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இழந்ததும் தெரிய வந்தது.
ஆன்லைன் சூதாட்டம்
ஜெகதீஷ் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய பரபரப்பு தகவல் வருமாறு:-
ஜெகதீஷ் கடந்த சில ஆண்டுகளாக ரம்மி விளையாடி வந்து உள்ளார். ஆரம்பத்தில் சில ஆயிரங்களை மட்டுமே வைத்து சூதாடினார். அதில் கொஞ்சம் பணம் கிடைத்து உள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்ட மோகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர், அலுவலக ஓய்வு நேரம், மற்றும் விடுமுறை நாட்களில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மூழ்கினார். அதன் மூலம் பல லட்சம் ரூபாய் சம்பாதித்து உள்ளார். இதனால் மீண்டும், மீண்டும் பணம் கட்டி விளையாட தொடங்கினார். ஆனால் அவர், பல லட்சம் ரூபாய்களை இழக்க தொடங்கினார்.
தினசரி ரூ.4 லட்சம் இழந்தார்
ஆனாலும் விட்ட பணத்தை பிடித்து விட வேண்டும் என்ற ஆசையும், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பங்கேற்க தன்னிடம் பணம் இல்லாததால் வேலை பார்த்த நிறுவனத்தில் ரூ.55 லட்சம் தங்கக்கட்டிகள், நகைகளை மோசடி செய்து கேரளாவில் உள்ள சிலருக்கு விற்பனை செய்து பணம் பெற்று உள்ளார்.
அதை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி அந்த பணத்தையும் இழந்து உள்ளார். கடைசி சில நாட்கள் மட்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் தினமும் ரூ.4 லட்சம் வரை இழந்து உள்ளார்.
அவரிடம் மோசடி செய்த தங்க கட்டிகளை கேரளாவில் யார், யாரிடம் விற்பனை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகிறோம். அதை மீட்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






