சேந்தமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகைப்பறிப்பு


சேந்தமங்கலம் அருகே  வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகைப்பறிப்பு
x

சேந்தமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகைப்பறிப்பு

நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே ராமநாதபுரம் புதூரில் இருந்து பள்ளம்பாறை செல்லும் பகுதியில் வசித்து வருபவர் முத்தம்மாள் (வயது 65). இவர் வீட்டில் தனியாக இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று பெண் ஒருவர் முத்தம்மாள் வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டில் இருந்த முத்தம்மாளிடம் நைசாக பேச்சு கொடுத்து வீட்டு வேலை உள்ளிட்ட உதவி செய்வதாக கூறினார். இதை நம்பிய மூதாட்டி, அந்த பெண்ணிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த பெண், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த நகைபறிப்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற பெண்ணை தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story