செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் வாபஸ் பெறப்படவில்லை - அண்ணாமலை சொல்கிறார்
செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த அறிவிப்பை வாபஸ் பெற்றதாக கவர்னர் கூறவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை,
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்தார் .
இந்த நிலையில் இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது ,
செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த அறிவிப்பை வாபஸ் பெற்றதாக கவர்னர் கூறவில்லை .உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பாதுகாப்பது ஏன் ? . அமைச்சரவையை முதல் அமைச்சர் சரியாக கையாளவில்லை. அமைச்சருக்காக முதல் அமைச்சர் வரம்பு மீறி செயல்படுகிறார்.