"சிறையில் செந்தில் பாலாஜிக்கு வசந்த மாளிகையைப் போல ஏற்பாடு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்


சிறையில் செந்தில் பாலாஜிக்கு வசந்த மாளிகையைப் போல ஏற்பாடு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
x

ஆட்சி போய்விடும் என்று செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்துள்ளனர் எனமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்

சென்னை,

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த . முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறுகையில் ,

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில்தான் இருக்கிறார், அன்று அவருக்கு ஏ கிளாஸ் வகுப்பு தரப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில், வசந்த மாளிகை போல வசதிகள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.. சிறையில் பல்வேறு விதிகள் மீறப்பட்டு வருகிறது. இதனை அமலாக்கத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.செந்தில் பாலாஜி ஒரு ஏக்நாத் ஷிண்டேவாக கூட மாறலாம். தமிழகமே செந்தில் பாலாஜியை அமைச்சரவிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறினாலும், ஆட்சி போய்விடும் என்று அவரை அமைச்சரவையில் வைத்துள்ளனர்" என கூறினார் .


Next Story